கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் வரவில்லை

கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் வரவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறினர்.

Update: 2022-04-15 22:11 GMT
தாயில்பட்டி, 
கண்மாயில் தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டு பறவைகள் வரவில்லை என கிராம மக்கள் வேதனையுடன் கூறினர். 
பறவைகள் 
ஏழாயிரம்பண்ணை அருகே சங்கரபாண்டியபுரத்தில் உள்ள புளிய மரங்களில் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியாவிலிருந்து செங்கால் நாரைகள், நைஜீரியாவில் இருந்து கூழக்கூட பறவைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பறவைகள் அழையாத விருந்தாளிகளாக இங்குள்ள மரங்களில் மார்ச் மாதத்தில் வர தொடங்கி விடுவர். 
பின்னர் இந்த மரங்களில் கூடுகட்டி சங்கரபாண்டியபுரம் கண்மாய், வெம்பக்கோட்டை அணை மற்றும் அருகில் உள்ள கண்மாய்களில் மீன்களை உணவாக உண்கின்றன. இங்கு உள்ள மரங்களில் கூடு கட்டி தங்கியிருக்கும். 
வறண்ட கண்மாய் 
ஆண்டுதோறும் தவறாமல் இப்பறவைகள் வந்து ஆகஸ்டு மாதம் வரை தங்கியிருக்கும். அந்த சமயத்தில் இந்த ஊரை சேர்ந்த மக்கள் இந்த பறவைகளுக்கு தொந்தரவு தருவதில்லை. பட்டாசு வெடிப்பதில்லை. 
பறவைகள் சற்று வளர தொடங்கியதும் தங்கள் தாய் நாட்டிற்கு சென்று பறவைகள் சென்று விடும். இந்தநிலையில் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக அனைத்து கண்மாய்களும், ஊருணிகளும், நிறைந்துள்ளன. இன்னும் ஏராளமான கண்மாய்களில் தண்ணீர் வற்றாமல் உள்ளது. ஆனால் சங்கரபாண்டியபுரம் கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும், தண்ணீர் வரவில்லை. இதனால் கண்மாய் வறண்டு காணப்படுவதால் ஒரு பறவை கூட இங்கு வரவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் ெதரிவிக்கின்றனர். 

மேலும் செய்திகள்