கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

Update: 2022-04-16 18:20 GMT
கரூர்
கரூர், 
கரூர் ஜவகர்பஜாரில் பழமை வாய்ந்த பண்டரிநாதன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று காலை பண்டரிநாதனுக்கும், ரகுமாயி தாயாருக்கும், சங்குசக்கர விநாயகருக்கும், ஆஞ்சநேயருக்கும், ஆண்டாள் நாச்சியாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை ரகுமாயி உடனான பண்டரிநாதன் சுவாமி புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா நடைபெற்றது.
இதேபோல வேலாயுதம்பாளையம் அருகே தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜை நடந்தது.  இதேபோல நாணப்பரப்பு, கடம்பங்குறிச்சி மாரியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புதுகாளி அம்மன் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்