டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தேசிய மாதர் சம்மேளன மாநில செயலர் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-04-19 20:07 GMT
விருதுநகர்,
விருதுநகரில் இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில செயலாளர் மஞ்சுளா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளதால் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மே 22-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.  டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய சி.பி.எஸ்.இ. பாட புத்தகத்தில் வரதட்சணை வேண்டும் என்ற நிலையில் கருத்து உள்ளது. 1961-ம் ஆண்டே வரதட்சனை வாங்குவது குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டு விட்ட நிலையில் இந்த கருத்தை பாடபுத்தகத்திலிருந்து நீக்க வேண்டியது அவசியமாகும்.  விருதுநகரில் நடந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் இளம் பெண் மீது புகார் கொடுத்திருப்பது என்பது ஏற்புடையது அல்ல. 
இவ்வாறு அவர் கூறினார். 
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலத்தில் இந்திய தேசிய சம்மேளன மாநிலக்குழு கூட்டத்தில் விலைவாசி உயர்வை எதிர்த்து மே 22-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்