பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை

பிளஸ்-2 மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை நடந்தது.

Update: 2022-04-20 18:29 GMT
கரூர்
கரூர், 
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை மற்றும் உயரே பறக்க ஆசை என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி இணையதள வாயிலாக மாணவர்கள் பயின்றனர். இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தெரிந்து கொள்வதற்காக சிறகை விரித்து உயரே பறந்து உலகை காண்போம் வா என்ற நான் முதல்வன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள 68 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 880 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர். 
இந்தநிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்கள் மாணவ- மாணவிகளுக்கு இணையதள வாயிலாக கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்க உள்ளனர். கடந்த 18 மற்றும் 22-ந்தேதி அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், 23-ந்தேதி கலைப்பிரிவு மாணவர்களுக்கும் என 2 கட்டங்களாக கரூர் மாவட்டத்தில் நான் முதல்வன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்