அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் சுற்றித்திரியும் புலி-சிறுத்தைகள்

அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றிகள் சுற்றித்திரியும் காட்சிகள் வனத்துறை ைவத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

Update: 2022-04-27 15:22 GMT
அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை மற்றும் காட்டுப்பன்றிகள் சுற்றித்திரியும் காட்சிகள் வனத்துறை ைவத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. 
சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், தட்டகரை வனச்சரகம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத்துறையின் சார்பில் 35 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இவற்றை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராவில் இருந்து பதிவானதை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் பர்கூர் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றி திரிவது பதிவாகியுள்ளது.
வனத்துறை எச்சரிக்கை
இதுதவிர மற்ற வனவிலங்குகளின் நடமாட்டமும் கேமராவில் பதிந்துள்ளது. யானைகள், முள்ளம்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவுகளை தேடி சுற்றி திரிவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் அடிக்கடி சுற்றி திரிகிறது. எனவே மலைப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பில்லாமல் வெளியே வரக்கூடாது. வீடுகளுக்கு முன்பு மின்சார விளக்கை எரியவிட வேண்டும். மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்