நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல்லில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

Update: 2022-04-29 17:17 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துவதோடு, நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே பயிர்க்கடன் பெற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் சந்தையில் வெளிமாவட்ட வியாபாரிகளின் காய்கறிகளை அனுமதிக்கக் கூடாது. பாம்பு கடித்து இறப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மின்தடை நேரத்தை முறையாக அறிவித்து மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டது. அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் நடராசன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்