எடுத்தனூர் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் 830 பேர் சிகிச்சை பெற்றனர்

எடுத்தனூர் கிராமத்தில் பொது மருத்துவ முகாம் 830 பேர் சிகிச்சை பெற்றனர்

Update: 2022-04-29 17:25 GMT
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொது மருத்துவ முகாம் நடந்தது. இதை எடுத்தனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்தானம் தொடங்கிவைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், ஊராட்சி செயலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற முகாமில் சீர்பனந்தல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் 830 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் 28 தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர். முகாமில் 100 பேருக்கு முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 10 பேருக்கு மருந்துப் பெட்டிகளும் வழங்கப்பட்டன. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார அடையாள அட்டை வழங்கப்பட்டது. முகாமில் செவிலியர்கள் காந்திமதி, வாணி, திவ்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்