மின்வாரிய செயற்பொறியாளர் பணிஇடை நீக்கம்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய மின்வாரிய செயற்பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-29 17:53 GMT
கமுதி, 

கமுதி அருகே அபிராமம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உடையநாதபுரத்தை சேர்ந்த நாகலிங்கத்திடம் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.3500 லஞ்சம் கேட்டார். லஞ்சம் ெகாடுக்க விரும்பாத நாகலிங்கம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரூ.3500 லஞ்ச பணம் கொடுத்த போது இடைத்தரகர் சேகர் கைது செய்யப்பட்டார். போலீசார் தேடுவதை அறிந்ததும் விஜயகுமார் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக செல்ேபான் ஆடியோ பதிவுகளின் அடிப்படையில் விஜயகுமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் லஞ்ச விவகாரம் தொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்