வளர்ச்சித்திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு

வளர்ச்சித்திட்ட பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-04-29 19:40 GMT
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை தலைமைப் பொறியாளர் குற்றாலிங்கம் வளர்ச்சித் திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கோவிந்தபுத்தூர் ஸ்ரீபுரந்தான் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கோப்புகளை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நடைபெற்று வரும் பணிகள், ஜல் ஜீவன் திட்டத்தில் முடிவு பெற்ற பணிகள் மற்றும் மக்களுக்கு அதனால் கிடைக்கப்பெறும் பயன்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2017-18, 18-19, 19-20, 20-21, 21-22 ஆகிய ஆண்டுகளில் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணி ஆணை வழங்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் கட்டி முடிக்கப்படாமல் உள்ள வீடுகளின் பயனாளிகளிடம் விரைவில் வீடுகளை கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட செயற்பொறியாளர் ராஜராஜன், உதவி செயற்பொறியாளர்கள் வகிதாபானு, சீதாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், கோவிந்தபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கதிரேசன், ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்