தாளவாடி அருகே வனக்குட்டையில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானைகள்

தாளவாடி அருகே வனக்குட்டையில் குட்டிகளுடன் தண்ணீர் குடித்த யானைகள்

Update: 2022-05-02 21:39 GMT
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, தலமலை, ஜுர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் குளம், குட்டைகள் சிறிதளவு தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன. இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மகாராஜன்புரம் அருகே அமைந்துள்ள வனக்குட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. கடும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சில நேரங்களில் யானைகள் குட்டையில் குளித்து கும்மாளமிட்டு செல்கின்றன.

மேலும் செய்திகள்