தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 32 நிறுவனங்களுக்கு அபராதம்

மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 32 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-05-03 18:45 GMT
கரூர், 
கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் கரூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் தங்கையன், முதல் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் சரவணக்குமரன் மற்றும் 2-ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் குமரக்கண்ணன் ஆகியோர் மே தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேசிய பண்டிகை விடுமுறை தினமான மே தினத்தன்று தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கோரும் படிவம் ஆய்வாளர்களுக்கு அனுப்பாமல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக தொழிலாளர் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் கடைகள், நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 15 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 15 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. மேலும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 2 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட விதிகளை அனுசரிக்காத மொத்தம் 32 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 1958-ம் வருட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின்படி தொழில் நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை தினத்தன்று பணி மேற்கொண்டால் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது சம்பளத்துடன் கூடிய விடுப்போ அளிக்கப்பட வேண்டும் என கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்