வீரப்பனால் சுட்டு கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி பயன்படுத்திய ஜீ்ப் புதுப்பிப்பு

வீரப்பனால் சுட்டு கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி நினைவாக அவர் பயன்படுத்திய ஜீப் புதுப்பிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அந்த ஜீப், மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-04 20:31 GMT
கொள்ளேகால்: வீரப்பனால் சுட்டு கொல்லப்பட்ட வனத்துறை அதிகாரி நினைவாக அவர் பயன்படுத்திய ஜீப் புதுப்பிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அந்த ஜீப், மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வீரப்பனை உயிருடன் பிடிக்க.....

கர்நாடகம், தமிழ்நாடு மாநில அரசுகளை அச்சுறுத்தி வந்தவர் வீரப்பன். இவர், சந்தன மரங்களை வெட்டி கடத்துவதை தொழிலாக கொண்டிருந்தார். இரு மாநில அரசும் வீரப்பனை உயிருடன் பிடிக்க முயற்சி மேற்கொண்டது. அதன்படி அரசு சார்பில் நியமிக்கப்பட்ட தனிப்படை போலீசார், வனத்துறை அதிகாரிகள் வீரப்பனை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். 

அதன்படி கடந்த 1990-1991-ம் ஆண்டில் வீரப்பனை பிடிக்க கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டவர் வனத்துறை அதிகாரி சீனிவாஸ். ஆந்திர மாநிலம் இவரது சொந்த ஊர் ஆகும்.

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் பொறுப்பில் இருந்த போது வீரப்பனை பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் தரப்பில் 3 ஜீப்புகள் பயன்படுத்தப்பட்டது.  இந்நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதி சீனிவாஸ் இந்த ஜீப்புகளில்தான் வீரப்பனை சுற்றி வளைத்தாக கூறப்படுகிறது. அப்போது சரணடைவது போன்று நடித்த வீரப்பன் வனத்துறை அதிகாரி சீனிவாசனை சுட்டு கொன்றா்ா. 

ஜீப் புதுப்பிப்பு 

இதையடுத்து ஜீப்புகளை யாரும் எடுக்கவில்லை. அதில் ஒரு ஜீப் வீரப்பனை பிடிக்க சென்ற பாலாறு வனப்பகுதியில் விட்டு செல்லப்பட்டது. ஒரு ஜீப் முன்னாள் மந்திரி எச்.நாகப்பாவை வீரப்பன் கொன்றபோது, ெபாதுமக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு ஜீப் பழைய இரும்பு கடைகளில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் மலைமாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்தில் பணியில் சேர்ந்த துணை வனத்துறை அதிகாரி சோமசேகர், சீனிவாஸ் குறித்தும் அவர் பயன்படுத்திய ஜீப் குறித்தும் தெரிந்து கொண்டார். 

இதையடுத்து சீனிவாசுவிற்கு ஒரு ஜீப்பை நினைவு சின்னமாக வைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக பாலாறு சென்ற அவர், அந்த ஜீப்ைப மீட்டு ைமசூருவில் உள்ள மெக்கானிக் கடைக்கு எடுத்து சென்றார். அங்கு வாகனத்தின் உதிரி பாகங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. 

சுற்றுலா பயணிகள்...

பின்னர் மைசூருவில் இருந்து கொள்ளேகாலில் உள்ள மலை மாதேஸ்வரா வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து தனி கூடாரம் அமைத்து சுற்றுலா பயணிகள் பார்வைக்காக ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வனத்துறை அலுவலகத்திற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ஜீப்பை பார்வையிட்டு செல்கின்றனர். 

மேலும் செய்திகள்