ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பட்டுக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன

Update: 2022-05-04 21:00 GMT
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை நகரில் கடைத்தெரு, பஸ் நிலையம் உள்பட பொது இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், தற்போது கோடைகாலம் என்பதால் கடைகள் முன்பு நிழலுக்காக கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், போக்குவரத்துக்கு மேலும் சிரமம் ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டர், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனுக்கள் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், பட்டுக்கோட்டை வருவாய் துறையினர் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை பட்டுக்கோட்டை பஸ் நிலையம், பஸ் நிலையம் எதிரே உள்ள சாலை, பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு மற்றும் கடைத்தெரு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்தப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்