நாமக்கல் மாவட்டத்தில், 82 மையங்களில் பிளஸ்-1 தேர்வு நாளை தொடக்கம் 19,842 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

நாமக்கல் மாவட்டத்தில், 82 மையங்களில் பிளஸ்-1 தேர்வு நாளை தொடக்கம் 19,842 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

Update: 2022-05-08 13:17 GMT
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 200 பள்ளிகளில் இருந்து 9,988 மாணவர்கள், 9,853 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 82 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்வு பணியில் 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 120 நிரந்தர பறக்கும் படையினர், 1,201 அறை கண்காணிப்பாளர்கள் என சுமார் 1,500 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்