கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை ஊழியர்கள் மறியல்

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 128 ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-09 16:41 GMT
சிவகங்கை,

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட 128 ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

சிவகங்கை மாவட்ட நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் அகவிலைப்படியை வழங்க வேண்டும், நியாய விலை கடைக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும், நியாய விலை கடைக்கு வழங்கும் பொருட்களை தரமானதாகவும், பொட்டலமாகவும் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இந்த மறியல் போராட்டத்துக்கு மாநில பொதுச் செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

128 பேர் கைது

இந்த போராட்டத்தில் மாவட்டதலைவர் மாயாண்டி, சிவகங்கை கிளை தலைவர் கவுரி, செயலாளர் பாண்டி, பொருளாளர் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 19 பெண்கள் உட்பட 128 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்