ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-09 16:42 GMT
கரூர்
நொய்யல்,
கரூர் சின்னாண்டான்கோவில் ஏ.வி.எஸ்., ஏ.வி.கே. காலனியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் துரைகுமாரசாமி (வயது 62). இவர் தனக்கு சொந்தமான பூர்வீக இடத்தை தனது பெயருக்கு பட்டா செய்து வீட்டு மனைகளாக பிரித்து (ஒரு ஏக்கர் 12 சென்ட்) கரூரைச் சேர்ந்த ஒரு நபருக்கு விற்பனை செய்ய புகழூர் அருகே முருகம்பாளையம் தனியார் சர்க்கரை ஆலை அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர். 
அப்போது புகழூர் அருகே உள்ள முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த துரைகுமாரசாமியின் அண்ணன் யுவராஜபாலன் (68). இவரது மகன்கள் கவுரிசங்கர் (30). கவின்குமார் (35) ஆகிய 3 பேரும் அங்கு வந்து,  துரைகுமாரசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.. இதில் படுகாயம் அடைந்த துரைகுமாரசாமி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் கவுரிசங்கர், கவின்குமார், யுவராஜயபாலன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்