சாலை மைய தடுப்பு கம்பியில் கார் மோதி 2 பேர் பலி

மணப்பாறை அருகே சாலையின் மைய தடுப்பு கம்பியில் கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது, இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.

Update: 2022-05-09 19:48 GMT
வையம்பட்டி, மே.10-
மணப்பாறை அருகே சாலையின் மைய தடுப்பு கம்பியில் கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர். கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது, இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொடைக்கானலுக்கு சுற்றுலா
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 34). இவரும் கொரட்டூரைச் சேர்ந்த காமராஜ் (29), கார்த்திக் (29), செஞ்சி வானகரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (29), கவியரசு (31), சுரேஷ் (40), ஆவடியை சேர்ந்த செல்வகுமார் (32) ஆகியோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
2 பேர் பலி
காரை செல்வகுமார் ஓட்டினார். கார் நேற்று முன்தினம் நள்ளிரவு திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆசாத்ரோடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி இரும்புக் கம்பியில் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயேரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஏழுமலை, சுரேஷ், காமராஜ் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் லேசானகாயம்அடைந்தனர்.இதைப்பார்த்தஅக்கம்பக்கத்தினர்காயமடைந்தவர்களைமீட்டுசிகிச்சைக்காகமணப்பாறைஅரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த சுரேஷ், காமராஜ் ஆகியோர் திருச்சிஅரசுமருத்துவமனைக்குஅனுப்பிவைக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்