நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா

நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2022-05-10 17:52 GMT
நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் 13 இளநிலை பட்டப்படிப்பு மற்றும் 5 முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியின் 15-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) பாரதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஜோதி சிவஞானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதில் தமிழக அனைத்து கல்லூரிகள் அளவிலும், பெரியார் பல்கலைக்கழக அளவிலும் விலங்கியல் துறையில் மதிப்புறு அறிவியல் முனைவர் பட்டம் (டி.எஸ்.இ.) பெற்ற பேராசிரியை சர்மிளா பானு அதற்கான பட்டத்தை வழங்கி கவுரவிக்கப்பட்டார். இதேபோல் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் விமலா, கவுசிகா, வனிதா, இந்துஜா உள்பட இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை, முது அறிவியல், ஆய்வியல் நிறைஞர் என 2,020 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் துறை தலைவர்கள், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்