சூறைக்காற்றுடன் பலத்த மழை 6 ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்தன

தண்டராம்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக 6 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

Update: 2022-05-10 18:03 GMT
தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக 6 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

தண்டராம்பட்டு மற்றும் தானிப்பாடி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்களும் சாய்ந்தன.

தானிப்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் வயது 45 என்பவர் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் சே ஆண்டாள் பட்டு பகுதியில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளும்குலைதள்ளிய நிலையில் சாய்ந்தன. சூறாவளியுடனங் மழை காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு மின்வினியோகத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதனிடையே வாைழ உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்