சொத்து வரி உயர்வை கண்டித்து ேபாராட்டம்

சாத்தூர், ராஜபாளையத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ேபாராட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-10 19:44 GMT
சாத்தூர், 
சாத்தூர், ராஜபாளையத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து ேபாராட்டம் நடைபெற்றது. 
சாத்தூர் 
சாத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பெத்தராஜ் தலைமை தாங்கினார். நகர கன்வீனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் வட்டார போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் விஜயகுமார்,  கட்சி நிர்வாகிகள் தெய்வானை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி  சாத்தூர் நகராட்சி ஆணையரிடம் அளித்தனர். 
ராஜபாளையம் 
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. போராட்டத்திற்கு நகர்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் நகர் குழு உறுப்பினர்முருகானந்தம், மாதர் சங்க நகர தலைவர் மைதிலி மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன், பகிர்வு அறக்கட்டளை சார்பாக செல்வகுமார் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து கோரிக்கை மனு நகராட்சி மேலாளர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலரிடம் அளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்