பலத்த காற்றுடன் மழை; வாழை மரங்கள் சேதம்

பலத்த காற்றுடன் மழை பெய்ததையடுத்து வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

Update: 2022-05-10 20:02 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலை முதல் கடும் வெப்பமும், மாலையில் இதமான தட்பவெப்ப நிலையும் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த ஒரு வாரமாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெரம்பலூர் நகரிலும், குரும்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலும் இடி, மின்னலுடனும், பலத்த காற்றுடனும் சிறிதுநேரம் மழை பெய்தது.

மேலும் சுழன்று வீசிய சூறாவளி காற்றினால், குரும்பலூர் பகுதியில் வேணு என்ற விவசாயி தனது வயலில் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பல வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதேபோல் மூலக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி துரைராஜ் என்பவர், தனது வயலில் சுமார் ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் குலைகளுடன் கூடிய பல வாழை மரங்கள் சாய்ந்தன.

மேலும் செய்திகள்