இந்திய அன்னிய வர்த்தகத்தில் உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் குறித்த கருத்தரங்கு

இந்திய அன்னிய வர்த்தகத்தில் உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2022-05-10 20:28 GMT
இளையான்குடி, 
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக இந்திய அந்நிய வர்த்தகத்தில் உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. ஆட்சிக்குழு தலைவர் அப்துல்அஹது கருத்தரங்கை ெதாடங்கி வைத்தார். வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகமது வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை உரையாற்றினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லா கான் மற்றும் வணிகவியல் இணை பேராசிரியர் முகமது இப்ராகிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் பேராசிரியர் அமிலன் கலந்து கொண்டு உக்ரைன்-ரஷ்யா போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் குறித்து பேசினார். இந்நிகழ்வினை உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் வழிநடத்தினார். வணிகவியல் உதவி பேராசிரியர் சாகிர் உசேன் நன்றி கூறினார். இதேபோல் இரண்டாவது அமர்வில் பேராசிரியர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ரஷ்யா- உக்ரைன் போரினால் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வினை பேராசிரியை பவுசியா சுல்தானா ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்கில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர். உதவிப்பேராசிரியர் நாசர் நன்றி கூறினார். கருத்தரங்கில்  பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் உள்பட 410 பேர் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகள் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகள்