தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் ஆழ்துளை கிணறு பழுதை சரிசெய்ய வலியுறுத்தல்

ஆழ்துளை கிணறு பழுதை சரி செய்யக்கோரி தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-10 22:22 GMT
தம்மம்பட்டி, 
பொதுமக்கள் முற்றுகை
தம்மம்பட்டி பேரூராட்சி 12-வது வார்டு சந்தை ரோடு ஆற்று இறக்கம் பகுதியில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்த ஆழ்துளைக்கிணறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதாகி விட்டது. மேலும் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு அந்த பகுதி மக்கள் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த ஊழியர்கள், இதுதொடர்பாக செயல் அலுவலரிடம் தெரிவிப்பதாக கூறினர்.
கலைந்து சென்றனர்
அப்போது அவர், விரைவில் ஆழ்துளை கிணறு பழுதை சரி செய்யாவிட்டால் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேரூராட்சி அலவுலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.
தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் திருச்செல்வம் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்