மீன்கடை சூறை; போலீசார் விசாரணை

மீன்கடை சூறையாடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-11 01:19 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே நகைக்கடை வைத்திருப்பவர் செல்வராசு. இவருக்கு சொந்தமான இடம் ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் பிள்ளையார் கோவில் அருகே உள்ளது. அதில் பலர் வாடகைக்கு வியாபாரம் செய்து வருகின்றனர். அதேபோல் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் அங்கு மீன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த கடையின் தகர ஷீட்டுகளை ஆக்சா பிளேடு கொண்டு அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையில் மீன் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தகர ஷீட்டுகள் அனைத்தையும் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர். இதேபோல் அருகில் கொட்டகை அமைக்க நடப்பட்டு இருந்த சிமெண்டு தூண்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை மீன் வியாபாரம் செய்ய வந்த பெரியசாமி கடை சூறையாடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி இடத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து செல்வராசு, ஏற்கனவே தன்னிடம் இடத்தை விற்பனை செய்த ரவீஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடையை உடைத்து, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்துறை போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்