அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரி எழுந்தருளினர்

அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரி எழுந்தருளினர்

Update: 2022-05-11 10:17 GMT
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு  அலங்கரிக்கப்பட்ட தேரில் சோமஸ்கந்தர்-உமாமகேஸ்வரி மற்றும் கருணாம்பிகை எழுந்தருளினர். இன்று தேேராட்டம் நடக்கிறது. 
அவினாசி லிங்கேசுவரர் கோவில் 
அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 5ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த் திருவிழா தொடங்கியது.  கடந்த 9ந் தேதி இரவு 10.30 மணிக்கு பஞ்சமூர்த்திக்ள் புறப்பாடு 63  நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.
நேற்று முன்தினம்இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.இதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அதிர்வேட்டடு மேளதாளம் மற்றும் பஞ்சகவ்யங்கள் ஒலிக்க பெரிய தேரில் சோமஸ்கந்தர் உமாமகேஸ்வரியும், சிறிய தேரில் கருணாம்பிகை அம்மனும் எழுந்தருளினர். பின்னர் ஏராளமான பக்தர்கள் காலை முதல்ரதத்தின் மேல் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தேர் வடம்பிடித்து சிறிது தொலைவுஇழுத்து நிறுத்தப்படுகிறது. மீண்டும் 13ந் தேதி  தேர் வடம்பிடித்து இழுத்துநிலை சேர்க்கப்படும். பின்னர் 14ந் தேதி சிரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
15ந் தேதி வண்டித்தாரை நிகழ்ச்சி, 16ந் தேதி இரவு தெப்பத்தேரோட்டம் நடக்கிறது. 17ந் தேதி நடராசர் தரிசனம் நடக்கிறது. 18ந் தேதி மஞ்சள் நீர் விழா நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்