வெளிநாட்டில் இருந்து வாகன உதிரிபாகத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்

வாகன உதிரிபாகத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-05-11 13:45 GMT
கோப்பு படம்
மும்பை, 
  வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் பார்சல் மூலமாக தங்கம் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
  இதன்பேரில், அதிகாரிகள் விமான நிலைய கார்கோ பார்சல் பிரிவிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு மோட்டார் வாகன உபகரணங்கள் என எழுதப்பட்டு இருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். இதில் உபகரண பொருட்களின் இடையே தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். 
  அதிலிருந்த 5 கிலோ 800 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், கைப்பற்றிய தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.3 கோடியே 10 லட்சம் என தெரிவித்தனர். 
  இதுதொடர்பாக, அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தென்மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
---------

மேலும் செய்திகள்