ஓட்டப்பிடாரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஓட்டப்பிடாரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-11 14:46 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மேலஅரசடி பஞ்சாயத்தில் தலைவராக ரோகிணி ராஜ், துணைத்தலைவராக அழகு முனியம்மாள் உள்ளனர். இந்த நிலையில் மேல அரசடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் ரோகிணி ராஜ் தலைமையில் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில் துணைத்தலைவருக்கு வழங்கப்பட்ட வங்கி காசோலை புத்தகத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை நீக்கி தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 3 வார்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர்.
இதற்கிடையே இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துணைத்தலைவர் அழகு முனியம்மாள் மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவரிடம், யூனியன் துணைத்தலைவர் கோரிக்கை மனு வழங்கினார். இதுதொடர்பாக கலெக்டருக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக, கூடுதல் ஆணையாளர் உறுதி அளித்ததின்பேரில், போராட்டத்தை கைவிட்டு, துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்