விழிப்புணர்வு ஓவிய போட்டி

திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் காற்று- நீர் மாசுபாடு தடுப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டி நடந்தது

Update: 2022-05-11 15:31 GMT
வேளாங்கண்ணி;
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை, நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி   நடைபெற்றது. இதில் 25 பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு  தலைமை ஆசிரியர் துரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.   போட்டியில் மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 4 பரிசுகள் வீதம் வழங்கப்பட்டது. அப்போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலர் மரக்கன்றுகளை நட்டார்.
விழாவில் பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் ஆரிபு, கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணிஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகாசத்யராஜ், தேசிய பசுமைப்படை ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்