கெலவள்ளியில் வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்

கெலவள்ளியில் வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-05-11 16:16 GMT
மொரப்பூர்:
மொரப்பூர் ஒன்றியம் கெலவள்ளியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உதவி வேளாண்மை இயக்குனர் (பொறுப்பு) மோகன் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா சிவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வேளாண்மை அலுவலர் தவமணி வரவேற்று பேசினார். முகாமில் கிசான் கடன் அட்டை, பிரதமரின் கிஷான் திட்டம், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினர். இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் காமாட்சி மஞ்சுநாதன், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சிங்காரம், பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்