உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-05-11 16:56 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் மோகன்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுகாதார நிலைய ஊழியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர். 

மேலும் செய்திகள்