நிமிலேரி முனீஸ்வரன் கோவில் திருவிழா: பெண்கள் மாவிளக்கு ஊர்வலம்

நிமிலேரி முனீஸ்வரன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-05-11 16:56 GMT
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே நிமிலேரியில் முனீஸ்வரன், குந்தி மாரியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவையொட்டி பெண்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் நிமிலேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்