புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-05-11 17:12 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் அசோக்குமார் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இதில், திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்