94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அத்திப்பட்டு ஊராட்சியில் 94 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2022-05-11 17:56 GMT
காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி தாசில்தார் ரவி வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளர்களாக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், மாற்று திறனாளி உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை சான்று என 94 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து 35 மனுக்கள் பெறப்பட்டது.
சிறப்பு முகாமில் துணை கலெக்டர் சேகர், தனி வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், ஒன்றியக் குழு தலைவர் அனிதாகுப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், ஒன்றிய கவுன்சிலர் ஞானமணி அருள், துணை தலைவர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா, கிராம நிர்வாக அலுவலர்கள் விக்னேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்