மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

Update: 2022-05-11 18:09 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள பொட்டி தட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சங்கர்லால்குமாவத் தலைமை தாங்கினார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், போகலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அனைவரையும் வரவேற்றார்.  முகாமில் பொட்டி தட்டி, உரப் புளி, நென் மேனி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது  குறைகளையும் கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தனர். பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பார்வையிட்டார். பல்வேறு துறைகளின் சார்பில் 97 பேருக்கு ரூ.6.42 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கந்தசாமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் சைலஸ், பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜா, துணை தாசில்தார் சடையாண்டி, கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்