கோடை மழையை பயன்படுத்தி உழவுப்பணி

கோடையில் மழையை பயன்படுத்தி உழவுப்பணி செய்ய வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் அறிவுறுத்தினர்.

Update: 2022-05-11 18:21 GMT
காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அசானி புயல் தாக்கத்தால் காரைக்கால் மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள்  கோடை உழவு செய்யவேண்டும். கோடை உழவில் மண் அரிப்பு தடுக்கப்பட்டு, வயல்களிலே மழைநீர் உறிஞ்சப்பட்டு நிலத்தின் ஈரப்பதம், நிலத்தடி நீர் அதிக அளவு சேகரிக்கப்படும்.
கோடையில் உழுவதால் மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு வெயிலினாலும், பறவைகளுக்கு இரையாகவும் கொல்லப்படுகின்றன. மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் பெருக்கம் அதிகரிக்க கோடை உழவு வாய்ப்பாக அமையும். எனவே விவசாயிகள் கோடை உழவை தக்க நேரத்தில் மேற்கொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்