பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-11 18:33 GMT
நாகர்கோவில், 
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும், 3 சதவீத அகவிலைப்படியை ஜனவரி 22 முதல் உடனே வழங்கிட வேண்டும், தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், ஊராட்சி குடிநீர் திட்டப்பணியாளர்கள் மற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணமாக பெறும் முறையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர் தனசேகர் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் கண்டன உரையாற்றினார்.
இதில் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்க நிர்வாகி நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் லிங்கேச பெருமாள், நம்பி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்