போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றப்பட்டது.

Update: 2022-05-11 20:21 GMT
ஜெயங்கொண்டம், 
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் தனியார் பள்ளி உள்ளது.  இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி பழக்கடைகள், பழச்சாறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் இருந்தன. இதனால் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்து வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் நகராட்சி துறையினர், நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர். இந்தநிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையொட்டி நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த கடைகளை அகற்றினர். மேலும் அங்கிருந்த தள்ளுவண்டிகளை நகராட்சி லாரிகளில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்