அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-11 22:10 GMT
நாமக்கல்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மாநில அரசு பணியாளர்களுக்கும் உடனடியாக அறிவிக்க வேண்டும். சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு பயனை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் ரகுநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணை தலைவர் வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்