பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்

குன்னமலை ஊராட்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் சின்ராஜ் எம்.பி. கலந்து கொண்டார்.

Update: 2022-05-11 22:11 GMT
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே குன்னமலை ஊராட்சி இரும்பு பாலம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. பரமத்தி ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனராசு, கொங்கு நாடு மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பூபதி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை் வகித்தனர். சின்ராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.
குன்னமலை, கோலாரம், மணியனூர், நல்லூர், சீராப்பள்ளி, ராமதேவம், மேல்சாத்தம்பூர், நடந்தை, மாணிக்க நத்தம், வீரணம்பாளையம், சித்தம்பூண்டி ஆகிய 11 ஊராட்சிகளின் பொதுமக்களின் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் செல்வகுமார், உதவி நிர்வாக பொறியாளர் ராமமூர்த்தி, பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனம், நடராஜன், தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகளிடம் குடிநீர், சாலை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 87 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை சின்ராஜ் எம்.பி. அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்