ரேஷன் கடைகளில் ஆய்வு

சிவகிரி பகுதியில் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-05-16 07:00 GMT
சிவகிரி:
சிவகிரி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமையில், துணை தலைவர் லட்சுமிராமன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், செந்தில்வேல், மருதவள்ளி, சேவுகபாண்டியன் என்ற விக்னேஷ், உலகேஸ்வரி, ராஜலட்சுமி, அருணாசலம், சித்ராதேவி, முத்துலட்சுமி, விக்னேஷ், கலா என்ற கல்யாணசுந்தரி, ரத்தினராஜ், ரமேஷ், கருப்பாயி, கிருஷ்ண லீலா, இருளப்பன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
அவர்கள், சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள ரேஷன் கடை, கூட்டுறவு சொசைட்டி ரேஷன் கடை, குமாரபுரம் தளத்துக் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடை, சந்தி விநாயகர் கோவில் அருகே உள்ள ரேஷன் கடை, நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பாக உள்ள 2 ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
பின்னர் ரேஷன் கடை பணியாளர்களிடம் தரமான பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். எடை அளவு குறையாமல் தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அவர்களுடன் நகர பஞ்சாயத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்