20 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ‘ஏர்ஹாரன்கள்’ பறிமுதல்

பரமக்குடி அருகே 20 பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2022-05-17 18:52 GMT
பரமக்குடி,
பரமக்குடி நகர் பகுதிக்குள் வரும் கார்கள் மற்றும் அரசு, தனியார் பஸ்கள் ஆகியவை பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சத்தத்துடன் காற்று ஒலிப்பான்களை(ஏர்ஹாரன்கள்) பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் சென்றன. அதையொட்டி பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் பத்மபிரியா, பரமக்குடி பஸ் நிலையத்தில் திடீரென அங்கிருந்த பஸ்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மற்றும் தனியார் பஸ்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் வகையில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை பறிமுதல் செய்தார். ஏர் ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். மேலும் டிரை சைக்கிள்கள், டீசல் என்ஜின்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அவர்களை அகற்றுமாறும் உத்தரவிட்டார். அதன்படி 20 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுசமயம் பரமக்குடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்பட போக்குவரத்து போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்