ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் மட்டும் 100 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருப்பதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார்.;
image courtesy: ANI
ஸ்ரீநகர்,
ராணுவம் மற்றும் போலீசார் இணைந்த பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் மட்டும் 100 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருப்பதாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார்.
"இந்த ஆண்டின், முதல் 5 மாதம் 12 நாட்களில் 100 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 71 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள், 29 பேர் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டில் இதே காலத்தில் 50 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்" என்று அவர் கூறி உள்ளார்.