மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: கேரளாவைச் சேர்ந்த 16 மாணவர்கள் காயம்

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்ததில் கேரளாவைச் சேர்ந்த 16 மாணவர்கள் காயமடைந்தனர்.;

Update:2023-02-19 15:13 IST

பன்னா,

கேரளாவின் திருச்சூரில் உள்ள கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் சாகரில் உள்ள ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகத்திற்கு களப்பயணம் (Field visit) சென்றனர். இந்த நிலையில் பயணத்தின் ஒருபகுதியாக நேற்று மாலை பேருந்தில் கட்னி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பன்னா மாவட்டத்தில் உள்ள குவாகேடா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து உதவியாளர் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 32 மாணவர்களில் 16 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து காயமடைந்தவர்கள் ராய்புரா அரசு மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தலையில் படுகாயமடைந்த மாணவர் உட்பட இருவர் மேல்சிகிச்சைக்காக ஜபல்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்