16 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

16 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-09-13 15:21 IST

அகர்தலா,

திரிபுரா மாநிலம் தர்மநகர் மாவட்டம் உப்டஹல்லி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று மாலை தனது கிராமத்தில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பைக்கில் வந்த இருவர் சிறுமியை கடத்தி சென்றனர். மேலும், கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்ற இருவரும் அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அதேவேளை, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மயங்கிய நிலையில் வனப்பகுதியில் கிடந்த சிறுமியை கிராம மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்