கடும் பனிப்பொழிவு:ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேச மாநிலங்களில் அதிக அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2017-01-08 08:22 GMT
சிம்லா,

ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேச மாநிலங்களில் அதிக அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவின் வட மாநிலங்களான ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிம்லா,நார்கண்டா போன்ற பகுதிகள் பனிகட்டிகள் காணப்படுகின்றது. இதனால் அங்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளின் கூரைகள்,மரங்கள் போன்றவற்றில் பனிப்படலம் சூழப்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்