உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு
உத்தரபிரதேச மாநிலம் பாலியா அருகே அம்பேத்கர் சிலை மர்மநபர்கள் சிலரால் உடைப்பட்டுள்ளது. #AmbedkarStatue;
பாலியா,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா அருகே உள்ள கிராமத்தில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ராஷ்ரா காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஜக்தீஸ் சந்த்ர யாதவ் கூறுகையில், ”சர்தார்பூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 2 மணியளவில் மர்மநபர்கள் சிலர் சிலையின் கைப்பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளோம். மேலும் சிலை உடைக்கப்பட்ட பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைவர்களின் சிலை சேதப்படுத்தபடுவது நாட்டு மக்களிடையே பதற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.