பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லையில் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

Update: 2018-10-18 06:01 GMT
நாக்பூர்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இந்த ஆண்டு விஜய தசமி விழாவில் கலந்து கொண்டு பேசும் போது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் 
 பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டினார். 

அவர் பேசும் போது அரசாங்கம்  மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டை நாட்டினுடைய கொள்கையில் அதே நிலைதான் உள்ளது.ஒரு புதிய அரசாங்கம் அமைந்த  போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்று பகவத் கூறினார்.

பாதுகாப்புத் துறையில் ஒட்டுமொத்த சுய-நம்பிக்கை இல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. நாட்டின் பாதுகாப்பைப் பற்றி நாடு எச்சரிக்கையுடன் உள்ளது, மேலும் தோட்டாக்களைக் கொண்டு பதிலளிப்பதற்கு தைரியம் உள்ளது . ஆயுதப்படைகளை வலுப்படுத்துவதற்கும் அண்டை நாடுகளுடன் சமாதானத்தை ஊக்குவிப்பதற்கும் இடையே சமநிலையை பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது எப்போதும் சமாதானம், சகிப்புத்தன்மை மற்றும் அரசாங்கங்களுக்கிடையே  நட்பு உறவுடன் இருப்பது.

எல்லைப் பகுதியில் போராடும் இராணுவத் தளபதியின் குடும்பங்களின் பாதுகாப்பே நாட்டின் பொறுப்பு    "அரசு நடவடிக்கை  எடுத்துள்ளது ஆனால் அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும்  என கூறினார்.

விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, நோபல் பரிசு பெற்றவரும், சமூக ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்