உர்ஜித் படேல் ராஜினாமா; பா.ஜனதா அரசு மற்றொரு நிறுவனத்தை இழிவுபடுத்தி உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆர்.பி.ஐ.யை இழிவுபடுத்தியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2018-12-10 15:26 GMT

புதுடெல்லி,
 

 ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையில் மோதல் நிலவிய நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்னும் 9 மாதங்கள் பதவி இருக்கும் நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் முயற்சியே ராஜினாமாவிற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஆர்.பி.ஐ.யை இழிவுபடுத்தியுள்ளது என கூறியுள்ளது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜெவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு மற்றொரு நிறுவனத்தை  (ஆர்.பி.ஐ.) இழிவுபடுத்தி உள்ளது. கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா இதனை உறுதி செய்கிறது,” என்று கூறியுள்ளார். பொருளாதார கொள்கையை சீர்குலைக்கும் அரசு ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை அடக்கும் முயற்சியே ராஜினாமாவிற்கு காரணம் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

மேலும் செய்திகள்