திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 13 வாகனங்கள் காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, 13 வாகனங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது.

Update: 2018-12-10 21:45 GMT
திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் செலவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 லாரிகள், 6 பேட்டரி கார்கள், 2 குடிநீர் டேங்கர் லாரிகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி உள்ளது. அதனை, தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். தேவஸ்தான பொருட்கள், லட்டு பிரசாதம் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல 2 லாரிகள் பயன்படுத்தப்படும்.

தேவஸ்தான என்ஜினீயரிங் துறை சம்பந்தமாக கட்டிடங்கள் கட்டும் பணிகளுக்கு 3 லாரிகள் சிமெண்டு, கம்பி, மணல் ஆகியவற்றை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும். சாமி தரிசனம் செய்யவரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 6 பேட்டரி கார்கள் பயன்படுத்தப்படும். உள்ளூர் மக்கள், பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய டேங்கர் லாரிகள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்