ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது: குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் இடைத்தரகர் மனு

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட இடைத்தரகர், தனது குடும்பத்தினரிடம் பேச அனுமதி கோரி கோர்ட்டில் மனு அளித்தார்.

Update: 2019-01-11 21:45 GMT
புதுடெல்லி,

முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் வகையில் ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அவர் சார்பில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய குடும்பத்தினரிடமும், வக்கீல்களிடம் தொலைபேசியில் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனுவுக்கு 14-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்